பாலியல் வழக்கு விசாரணையில் கதறி அழுத நடிகை

 

பாலியல் வழக்கு விசாரணையில் கதறி அழுத நடிகை

தன்னை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பிரபல மலையாள இளம்நடிகை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்தார். இதனால் கேரள திரையுலகம் அதிர்ந்தது.

இன்னனும் இந்த வழக்கு முடிந்தபாடில்லை. எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் நீதிபதி ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக கூறி, வழக்கு விசாரணயை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பாலியல் வழக்கு விசாரணையில் கதறி அழுத நடிகை

இம்மனு மீதான விசாரணையில், ‘’வழக்கை விசாரித்தது பெண் நீதிபதிதான் என்றாலும் அவர் வழக்கினை ஒருதலைபட்சமாக விசாரித்து வருகிறார். ஒரு பெண்ணாக இருந்தும் அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகையில் நிலைமையை புரிந்துகொள்ள முடியவில்லை. நடிகையை அவமானப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திலேயே கேட்கக்கூடாத கேள்விகளை கேட்கிறார். இதனால் அவமானத்தில் பலமுறை கதறி அழுதிருக்கிறார். ஆகவே, அந்த நீதிபதி நியாயமான தீர்ப்பினை வழங்குவார் என்பதில் நம்பிக்கை இல்லை. அதனால் வேறு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும்’’என்று நடிகையின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் எடுத்துக்கூறினார்.

இதையடுத்து, வழக்கின் மறு விசாரணையை வரும் 20ம்தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.