செல்வாக்கே இல்லாத ஒரு நடிகர கூட்டிக்கிட்டு வந்து.. சீனியரிடம் எகிறிய இளந்தலைவர்

 

செல்வாக்கே இல்லாத ஒரு நடிகர கூட்டிக்கிட்டு வந்து.. சீனியரிடம் எகிறிய இளந்தலைவர்

தலைவர் வேணும்னா அவராக இருக்கலாம். ஆனா, கட்சிக்குள் பெரும்பாலான முடிவுகளை எல்லாம் இப்ப அந்த உதயமானவர்தான் எடுத்துட்டு வர்றாராம். அதனாலதான் சீனியர்கள் எல்லோரும் தலைவரை விட்டுவிட்டு இவருக்கு கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

உதயமானவரால் தங்களது செல்வாக்குகள் எல்லாம் இளையவர்களுக்கே போய்க்கொண்டிருப்பதால், சீனியர்கள் பலரும் தங்களை நிலை நிறுத்த படாத பாடு பட்டு வருகிறார்கள்.

செல்வாக்கே இல்லாத ஒரு நடிகர கூட்டிக்கிட்டு வந்து.. சீனியரிடம் எகிறிய இளந்தலைவர்

கட்சிக்குள் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், அதே நேரத்தில் எலக்‌ஷன் நேரத்துல தனக்கு தீவிரமா வாக்கு சேகரிக்கவும் உதவுவார்னு நினைச்சு, அப்படியே அந்த நடிகரை அவரோட தொகுதியில நிக்க வச்சு ஜெயக்க வச்சுடலாம்ங்கிறதும் அந்த சீனியரோட திட்டம். இதுக்காக தன் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளம்நடிகரை கட்சிக்குள் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டு வர்றார் அந்த சீனியர்.

இது சம்பந்தமாக அந்த இளம் நடிகரை உதயமானவரிடம் பேசச்சொல்ல, ‘’ காலம் காலமாக போஸ்டர் ஒட்டுற அடிமட்ட தொண்டர்களுக்கே வாய்ப்பு கொடுக்க முடியல. இதுல உனக்கு எப்படி கொடுக்க முடியும்.’’என்று கேட்டு அவரின் லைனை துண்டித்துவிட்டு,

அந்த சீனியருக்கு உடனே லைன் போட்டு, ‘’செல்வாக்கே இல்லாத ஒரு நடிகர கூட்டிக்கிட்டு வந்து எனக்கு என் ப்ரண்டுக்கும் எதிரா அரசியல் செய்ய நினைக்கிறீங்களா?’’ன்னு கேட்ட கேள்வியில, அந்த தொணியில.. வியர்த்து விறுவிறுத்து போச்சாம் சீனியருக்கு.