ஒரு போஸ்டர் ஏற்படுத்திய ரெண்டு சர்ச்சைகள்

 

ஒரு போஸ்டர் ஏற்படுத்திய ரெண்டு சர்ச்சைகள்

மதுரையில் 1986ல் நடந்த மாநாட்டில் எம்.ஜி.ஆருக்கு வழங்குவதற்காக 6 அடி உயர செங்கோலினை தயார் செய்திருந்தார்கள் எம்.ஜி.ஆர். மன்றத்தினர். விழா மேடையில் அந்த செங்கோலை ஜெயலலிதா கையினால் எம்.ஜி.ஆருக்கு வழங்க வைத்தார்கள். பின்னர் அந்த செங்கோலினை அதே மேடையில் ஜெயலலிதாவிடமே கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

மன்றத்தினர் கொடுத்த செங்கோல் என்பதால் கட்சி தொண்டர் ஒருவரையும் கூப்பிட்டு அந்த செங்கோலினை பிடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். அந்த தொண்டர்தான் எடப்பாடி பழனிச்சாமி என்று சிலர் கிளப்பி விட்டதால் கடந்த ஆண்டு அந்த போட்டோ இணையங்களில் வைரலானது.

ஒரு போஸ்டர் ஏற்படுத்திய ரெண்டு சர்ச்சைகள்

எம்.ஜி.ஆரின் செங்கோல் கொடுப்பது போல் சில நடிகர்களின் பிறந்த நாளின்போதும், அரசியல் பிரமுகர்களின் பிறந்நாளின் போதும் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள்.

இந்நிலையில் 16ம்தேதி பிறந்தநாளை கொண்டாடும் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரத்திற்காக அவரது ஆதரவாளர்கள் மதுரை முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். இதில், எம்.ஜி.ஆர். கார்த்திக் சிதம்பரத்திற்கு செங்கோல் வழங்குவதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அதிமுக, திமுகவினரிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு போஸ்டர் ஏற்படுத்திய ரெண்டு சர்ச்சைகள்

பாஜக அண்மையில் தங்களது கட்சி விளம்பரத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை போட்டிருந்ததால் சர்ச்சை வெடித்தது. அதேபோல் இப்போது காங்கிரஸ் கட்சியும் எம்.ஜி.ஆர் படத்தை போட்டிருப்பதால் சர்ச்சை வெடித்திருக்கிறது.

மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எம்.பிக்கு மறைந்த அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர். செங்கோல் கொடுப்பது போல் போஸ்டர் அடித்ததால் அதுவும் தேர்தல் நெருக்கத்தில் இப்படி செய்ததால் திமுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.