யாரும் குழம்ப வேண்டாம்… முதல்வர் அளித்த விளக்கம்

 

யாரும் குழம்ப வேண்டாம்… முதல்வர் அளித்த விளக்கம்

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்பதுதான் ஜெயலலிதாவின் பலமாக இருந்தது. அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘உங்களுக்காக நான்’என்று சொல்லிவருகிறார். அதுவும் உயிர் மூச்சு உள்ளவரைக்கும் உங்களுக்காக நான்.. என்று உருக்கமாக சொல்லி வருகிறார்.

இந்நிலையில், தீபாவளி தினமான இன்று, ‘’இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்’’என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சொல்லி இருக்கும் கடிதத்தின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு, தீபாவளி திருநாளில் உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவித்துள்ளதால் முதலில் குழம்பமடைந்தனர். ஆனால், அவரின் கடிதத்தை மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தால், ‘அட!’என்று சொல்ல வைக்கிறது.

யாரும் குழம்ப வேண்டாம்… முதல்வர் அளித்த விளக்கம்

என் அன்பார்ந்த தமிழக மக்களுக்கு, என்று தொடங்கிய முதல்வர், ‘’முதலமைச்சர் தீபாவளி அன்று உழைப்பாளர் தின வாழ்த்தோடு துவங்குகிறாரே எனக் குழம்ப வேண்டாம். இந்த தீபாவளி திருநாள் நம் அனைவரின் உழைப்பிற்கும் கிடைத்த மகசூல்’’என்று விளக்கம் கொடுக்கும் முதல்வர்,

யாரும் குழம்ப வேண்டாம்… முதல்வர் அளித்த விளக்கம்

‘’கொரோனா காலத்திலும் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள், செயல் திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. நீர்மேலாண்மையிலும் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. சிறப்பான ஆட்சியில் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது. இதகெல்லாம் அரசு, அதிகாரிகளும், ஊழியர்களும் அதனை சார்ந்தோரும் உழைத்து இந்த மகத்தான சாதனைகளை செய்திருக்கிறார்கள். மக்களாகிய உங்களின் பங்கும் மிக முக்கியமானது’’என்று சொன்ன முதல்வர்,

‘’நமது உழைப்பிற்கு அகில இந்திய அளவில் கிடைத்திருக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சி அளித்தாலும் தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் அதிகம் இருக்கிறது. வருங்காலத்தில் தமிழ்நாட்டை அனைத்து துறையிலும் முதல் மாநிலமாக மாற்றும் பொறுப்பை தருகிறது. நம் உழைப்பின் வெற்றியால் அடுத்த தீபாவளி இன்னும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கும்’’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.