இதெல்லாம் அந்தத் திருட்டு நாய்க்கு எப்படி தெரிஞ்சது? பாதிக்கப்பட்டவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத எஸ்.பி.ஐ. நிர்வாகி

 

இதெல்லாம் அந்தத் திருட்டு நாய்க்கு எப்படி தெரிஞ்சது? பாதிக்கப்பட்டவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத எஸ்.பி.ஐ. நிர்வாகி

சார், உங்க ஏடிஎம் கார்டு ரினீவல் பண்ணாமல் இருக்குது. அதை உடனே ரினீவல் பண்ணுங்க. உங்க பொமைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அதச்சொன்னா..என்று எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து பேசுவது மாதிரி பேசி பலரது பணத்தை ஆட்டைய போட்ட வெளிமாநிலத்துக்காரனுங்க அண்மையில் போலீசில் சிக்கினாங்க. இதுமாதிரியான மோசடிகளால், ‘உங்க ஏடிஎம் கார்டு நம்பர், பின் நம்பர், ஓடிபியினை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்’என்று எஸ்.பி.ஐ. வங்கி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், அப்படி இருந்தும் சிலர் ஏமாந்துபோகத்தான் செய்கிறார்கள். அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் சரவணன் சவடமுத்து.

இதெல்லாம் அந்தத் திருட்டு நாய்க்கு எப்படி தெரிஞ்சது? பாதிக்கப்பட்டவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத எஸ்.பி.ஐ. நிர்வாகி

திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன், சென்னையில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு எஸ்.பி.ஐ. வங்கி்யில் இருந்து புதிய கிரெடிட் கார்டு வந்திருக்கிறது. அதில் கிரெடிட் லிமிட் 30 ஆயிரம் இருந்ததால் கிரெடிட் லிமிட்டை அதிகப்படுத்தக்கோரி எஸ்.பி.ஐ.கஷ்டமர் கேருக்கு பேசியிருக்கிறார். இந்த விவகாரத்தில் இடையில் சில மோசடி பேர்வழிகள் உள்ளே நுழைந்து, சரவணனிடம் இனிக்க இனிக்க பேசி அவரது ஓடிபி, பின் நம்பர் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு அவரது பணத்தை அபேஸ் செய்துவிட்டனர். யார் கேட்டாலும் ஓடிபி, பின் நம்பரை சொல்ல வேண்டாம் என்று எத்தனையோ முறை வங்கி அறிவுறுத்தியும் ஏமாந்து போனதுக்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்க மறுத்துவிட்டது. இதனால் போலீஸ், சைபர் க்ரைம் என்று அலைந்து கொண்டிருக்கிறார் சரவணன். தனக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்படக்கூடாது, அந்த மோசடி பேர்வழிகளை பிடித்துவிட வேண்டும் என்றே சட்டரீதியாக போராடிக்கொண்டிருக்கிறார்.

இந்த மாதிரியான மோசடிகளுக்கு வங்கி நிர்வாகத்தில் உள்ள சிலரும் உடந்தயாக இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

’’நீங்கதான் சுதாரிப்பா இருந்திருக்கணும். ஓடிபி நம்பரை ஏன் கொடுத்தீங்க..?’’ என்று கேட்ட, வங்கி நிர்வாகியிடம், “என்னோட பெயர், நான் வாங்கியிருக்கும் புதிய கிரெடிட் கார்டின் பெயர் ஐஆர்டிசி என்பது.. நான் அந்தக் கார்டை திருப்பியனுப்ப நினைத்திருந்தது.. அந்தக் கார்டின் கிரெடிட் லிமிட்டை உயர்த்தக் கோரி மெயில் அனுப்பியது.. இதெல்லாம் அந்தத் திருட்டு நாய்க்கு எப்படி தெரிஞ்சது..?” என்று ஆவேசமாக திருப்பிக் கேட்டிருக்கிறார் சரவணன்.

அதற்கு, ‘’வெளி நபர்களுக்கு மார்க்கெட்டிங் செய்ய காண்ட்ராக்ட் வேலை கொடுத்திருக்கிறோம். அவர்களில் யாராவது அந்த நாய்க்கு உதவியிருக்கலாம்…”என்று மழுப்பலான பதிலைச்சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்.