171 தொகுதிகளில் திமுக போட்டி! கூட்டணிக்கு 61 ஒதுக்கீடு: காங். போட்டியிடும் 27 இடங்கள்… ஐ பேக் இறுதிப்பட்டியல்

 

171 தொகுதிகளில் திமுக போட்டி! கூட்டணிக்கு 61 ஒதுக்கீடு:  காங். போட்டியிடும் 27 இடங்கள்… ஐ பேக் இறுதிப்பட்டியல்

திமுகவுக்கான தேர்தல் பணிகளை செய்து வருகிறது பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீம். இந்த குழு மீது கட்சியினர் பல்வேறு புகார்களை சுமத்தினாலும், தலைமை அதையெல்லாம் ஊதி தள்ளிவிட்டுவிடுகிறது. வர இருக்கும் தேர்தலில் முழுக்க முழுக்க ஐபேக் -ஐ மட்டுமே நம்பியிருப்பதுதான் அதற்கு காரணம்.

171 தொகுதிகளில் திமுக போட்டி! கூட்டணிக்கு 61 ஒதுக்கீடு:  காங். போட்டியிடும் 27 இடங்கள்… ஐ பேக் இறுதிப்பட்டியல்

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழு மாவட்டம் தோறும் சென்று திமுகவினரிடையே கருத்து கேட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, தேர்தலில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஐபேக் குழு, மாவட்டம் தோறும் ஆய்வு செய்து ஒரு அறிக்கை தயார் செய்திருக்கிறது. அதன்படி திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கிடு செய்வது என்பது குறித்து தீவிர ஆலோசனைக்கு பின்னர் ஐபேக் ஒரு பட்டியலை தயார் செய்து அதை இறுதி செய்திருக்கிறது.

இந்தப்பட்டியல்தான் இறுதிப்பட்டியல் என்று சொல்லும் அளவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்.

அந்த இறுதிப்பட்டியல் அறிவாலயத்திலிருந்து கசிந்திருக்கிறது. அதில், திமுக நேரடியாக 171 தொகுதிகளில் போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 இடங்கள் ஒதுக்கீடு என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

171 தொகுதிகளில் திமுக போட்டி! கூட்டணிக்கு 61 ஒதுக்கீடு:  காங். போட்டியிடும் 27 இடங்கள்… ஐ பேக் இறுதிப்பட்டியல்

அதாவது காங்கிரசுக்கு 27 இடங்களும், மதிமுகவுக்கு 6 இடங்களும், கம்யூனிஸ்ட்களுக்கு தலா 6 என மொத்தம்12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 இடங்கள், இந்தியன் யூனியன் முஸ்லிக் லீக் கட்சிக்கு 3 இடங்கள்,
இந்திய ஜனநாயக கட்சிக்கு 3 இடங்கள், மனித நேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் எனவும் அந்த இறுதிப்பட்டியலில் வரைவு செய்யப்பட்டுள்ளன.

ஐ பேக்கின் அந்த இறுதி பட்டியலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்கள் குறித்த தகவலும் கசிந்திருக்கிறது.

1.மதுரவாயல், 2 ராயாபுரம், 3.நாமக்கல், 4.கோபிசெட்டிப்பாளையம், 5.உதகமண்டலம், 6.வேடசந்தூர், 7.திருச்சி ( கிழக்கு), 8.முசிறி, 9.காட்டுமன்னர்கோவில் 10.நன்னிலம், 11.பட்டுக்கோட்டை, 12.அறந்தாங்கி, 13.காரைக்குடி, 14.சிவகாசி, 15.முதுகுளத்தூர், 16.வைகுண்டம், 17.நாங்குநேரி, 18.விளவங்கோடு, 19.கிள்ளியூர் 20.அம்பத்தூர், 21.மதுரை, 22.விளாத்திகுளம் , 23.வால்பாறை, 24.ராதாபுரம், 25.மைலாப்பூர், 26.பூவிருந்தவல்லி, 27.திருமயம் ஆகிய 27 இடங்கள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.