1,700 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நிசான்!

 

1,700 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நிசான்!

விற்பனை மந்தமாக உள்ளதால், கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் இந்தியாவில் 1,700 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் நிசான் மோட்டார். இந்நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் நிசான் நிறுவனம் கார் தயாரிப்பு ஆலையை கொண்டுள்ளது. சர்வதேச அளவில் தற்போது பொருளாதாரம் மிகவும் மந்தமாக இருப்பதால் அதன் தாக்கம் வாகன துறையில் தெளிவாக தெரிகிறது. சமீபகாலமாக கார்கள் விற்பனை நிலவரம் மோசமாக உள்ளது.

நிசான்

கார் விற்பனை குறைந்ததால் நிசான் மோட்டார் நிறுவனத்தின் லாபம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. இதனையடுத்து செலவினத்தை குறைக்கும் நோக்கில் உலகம் முழுவதும் உள்ள தனது பணியாளர்களில் 12,500 பேரை அடுத்த 3 ஆண்டுகளில் வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 1,700 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப நிசான் மோட்டார் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில், 6,400 பணியாளர்களை விடுமுறையில் செல்லும்படி ஏற்கனவே நிசான் கேட்டுக்கொண்டுள்ளது.

நிசான் கார்
கார் விற்பனை மந்தமாக உள்ளதால் பல நிறுவனங்கள்  உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நிசான் மோட்டார் நிறுவனம் செலவினத்தை குறைக்க பணியாளர்களை நீக்கம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதனை மற்ற நிறுவனங்களும் கடைப்பிடிக்க தொடங்கினால் பல ஆயிரம் வேலை இழக்க நேரிடும்.