ஆன்லைன் வகுப்பு புரியாததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

 

ஆன்லைன் வகுப்பு புரியாததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை திருவிக நகரில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் மன அழுத்தத்தில் இருந்த 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவிக நகர் தீட்டி தோட்டம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஹேமந்குமார். நீதிமன்ற ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களுக்கு மாதவன் என்ற மகன் உள்ளார். 11ஆம் வகுப்பு முடித்து தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் இயங்காததால் ஆன்லைன் மூலம் தினமும் பாடம் கற்று வருகிறார். சில மாதங்களாகவே பாடம் புரியாததால் மாதவன் மன அழுத்தத்தால் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆன்லைன் வகுப்பு புரியாததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

இந்நிலையில் இன்று மாலை தனது அறையில் கயிற்றால் தூக்கிட்டு மாதவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்செயலாக மாதவனின் தாயார் அவனது அறைக்குள் நுழையும்போது தனது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரியார் நகர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாதவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து திருவிக நகர் போலீசார் மாதவன் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருவிக  நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.