மத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை ! குற்றவாளி போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு !

மத்திய பிரதேசம் மாநிலம் ஷாடோட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் 22 வயது இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். இதை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஷாடோட் மாவட்டம் ஜெய்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். 11 ஆம் வகுப்பு மாணவி கடந்த செவ்வாயன்று மாலை அருகிலுள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.. புதன்கிழமை காலை, சிறுமி தனது வீட்டின் அருகே புதரில் மயக்கத்தில் கிடந்ததை உறவினர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில், சிறுமியை ஆரிஃப் கான் என்ற 22 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்துள்ளது. பின்னர் சிறுமியின் உடலை புதரில் வீசிவிட்டு சென்றுள்ளார். விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம் மற்றும் கொலை தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...