சபரிமலையில் அதிகரிக்கும் கொரோனா: தேவஸ்தான ஊழியர்கள் உட்பட 17 பேர் பாதிப்பு!

சபரிமலையில் அதிகரிக்கும் கொரோனா: தேவஸ்தான ஊழியர்கள் உட்பட 17 பேர் பாதிப்பு!

சபரிமலை தேவஸ்தான ஊழியர்கள்,காவலர் உட்பட 17 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 2000 பக்தர்கள் மட்டுமே விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளில் மட்டும் 3000 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாட்டால் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில், கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு கேரள அரசு அனுமதி அளித்தது. ஆனால், கேரள சுகாதாரத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

சபரிமலையில் அதிகரிக்கும் கொரோனா: தேவஸ்தான ஊழியர்கள் உட்பட 17 பேர் பாதிப்பு!

இந்த நிலையில், தேவஸ்தான ஊழியர்கள் 16 பேருக்கும் காவலர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள், சபரிமலைக்கு பாதுகாப்பாக வந்த போலீசார் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சபரிமலையில் அதிகரிக்கும் கொரோனா: தேவஸ்தான ஊழியர்கள் உட்பட 17 பேர் பாதிப்பு!

ஊழியர்களின் மூலமாக பிறருக்கு கொரோனா பரவாத வண்ணம் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சன்னிதான பணியில் இருந்த 9 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.