17 மாவட்டங்களில் பறவை காய்ச்சல்; 7 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு

 

17 மாவட்டங்களில் பறவை காய்ச்சல்; 7 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு

கொரொனா வைரஸ் நோயின் தாக்கத்தில் இருந்து இன்னமும் இந்தியா விடுபட முடியாத நிலையில் இருக்கும்போது, பறவை காய்ச்சலும் வந்து ஆட்டிப்படைத்துக் கொண்டிக்கிறது.

17 மாவட்டங்களில் பறவை காய்ச்சல்; 7 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு

கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என்று மத்திய அரசு எச்சரித்திருக்கிறது. இதனால் , நீர்நிலைகள், பறவைகள், விலங்குகள் சரணாலயங்கள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து வருமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இமாச்சல பிரதேசத்தின் கங்ராவில் பாங் வனவிலங்குகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் மொத்தமாக உயிரிழந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர் நடந்த தீவிர கண்காணிப்பில், கேரளா, ராஜஸ்தான்,இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எச்-5;எச்-1 என்ற பறவை காய்ச்சல் வைரஸ் கண்றியப்பட்டது. இந்த வைரஸ் குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களுக்கும் பரவியது.

17 மாவட்டங்களில் பறவை காய்ச்சல்; 7 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு

இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ராஜஸ்தானில் 7 ஆயிரம் பறவைகள் காய்ச்சலால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதால், ஜெய்ப்பூரிலும் காகங்கள்,மயில்கள், புறாக்கள் உயிரிழந்துள்ளன. அது குறித்தும் தீவிர நடவடிக்கைகளில் மத்திய சுகாதாரத்துறை இறங்கியுள்ளது.