17 வயது சிறுவனை மணந்த இளம்பெண் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

17 வயது சிறுவனை மணந்த இளம்பெண் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது: அதிர்ச்சி தரும் சம்பவம்!

17 வயது சிறுவனை திருமணம் செய்ததாக 22 வயது பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மும்பை: 17 வயது சிறுவனை திருமணம் செய்ததாக 22 வயது பெண்ணை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில், ‘தனது 17 வயது மகனை 22 வயது பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் அழைத்துச் சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து அவரது பெற்றோருடன் என் வீட்டுக்கு வந்தார். என் மகனை திருமணம் செய்துகொண்டதாகவும் இங்குதான் தங்கப் போகிறேன் என்றும் சொன்னார். இதற்கு நானும் என் கணவரும் எதிர்ப்புத் தெரிவித்தோம்.பின்னர் என்னைக் காயப்படுத்தி விட்டு என் மகனுடன் சென்றுவிட்டார். அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. என்னைச் சந்திக்க வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி என் மகனை அவருடன் வைத்துள்ளார். அதனால் என் மகனை மீட்டுத் தரவேண்டும் ‘என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இது வழக்கை விசாரித்த போலீசார், அந்த பெண்ணிடம் கேட்டபோது,விருப்பத்தின் பேரிலேயே எங்கள் திருமணம் நடந்தது. எங்களுக்கு இப்போது ஐந்தரை மாதத்தில் குழந்தை ஒன்று இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் சிறுவனை மணந்த குற்றத்திற்காக அந்தப் பெண்ணை போலீசார்  போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து பைகுல்லா சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.