17 எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு அனுப்பிய ஜோதிராதித்ய சிந்தியா……மத்திய பிரதேசத்தில் ஊசலாடும்  காங்கிரஸ் அரசு….

 

17 எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு அனுப்பிய ஜோதிராதித்ய சிந்தியா……மத்திய பிரதேசத்தில் ஊசலாடும்  காங்கிரஸ் அரசு….

2018ல் நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த கட்சியின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா. இதனால் தன்னை மத்திய பிரதேச முதல்வராக காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்ததார்.

காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தனது விசுவாசமான 6 மாநில அமைச்சர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2018ல் நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த கட்சியின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா. இதனால் தன்னை மத்திய பிரதேச முதல்வராக காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்ததார். ஆனால் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல் நாத்தை முதல்வராக மேலிடம் அறிவித்தது. இது சிந்தியாவுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

Kamal-Nath

முதல்வர் பதவிதான் கிடைக்கவில்லை சரி பரவாயில்லை, மத்திய பிரதேச காங்கிரசின் தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனால் ஜோதிராதித்ய சிந்தியா மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். அண்மையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் வீதியில் இறங்கி போராடுவேன் என சொந்த கட்சியின் ஆட்சிக்கு எதிராகவே பேசினார். இதனால் அவர் விரைவில் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து விடுவார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

Jyotiraditya-01

இந்நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, ஜோதிராதித்ய சிந்தியா தனக்கு விசுவாசமான 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கர்நாடக மாநிலம் பெங்களூரு அனுப்பி வைத்துள்ளார். ஆட்சியை கவிழ்க்க அவர் முடிவு செய்து விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ளதாக தகவல். காங்கிரசுக்கு தற்போது சட்டப்பேரவையில் மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. பக்கம் தாவி விட்டாலோ அல்லது தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டாலோ காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தை இழந்து விடும் பின் ஆட்சியை தாரை வார்க்க வேண்டியதுதான்.