17 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து அஜித்துடன் நடிக்கும் வடிவேலு! 

 

17 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து அஜித்துடன் நடிக்கும் வடிவேலு! 

எச்.வினோத் இயக்கத்தில்,அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அஜித்தின் 60 திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

எச்.வினோத் இயக்கத்தில்,அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அஜித்தின் 60 திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இயக்குநர் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் அடுத்த படத்தில் தல அஜித் நடிக்கவுள்ளார். இதே கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை மக்கள் மத்தியில் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்தப்படத்தையும் இவர்கள் மூவருமே உருவாக்கிவருகின்றனர். தல 60 படத்தின் பூஜைகள் முடிந்து புரடொக்‌ஷன் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில்  தற்போது அஜித்துடன் இணைந்து வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு அஜித்

இது வடிவேலு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 17 ஆண்டுகளுக்கு முன்பு எழில் இயக்கத்தில் ‘ராஜா’ திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து வடிவேலு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.