தோற்றுப்போனா உடனே ஓட்டுமெசின் மீது பழியைப்போடுறத நிறுத்துங்க…காங். பிரமுகர் மீது கார்த்தி சிதம்பரம் ஆவேசம்

தோற்றுப்போனா உடனே ஓட்டுமெசின் மீது பழியைப்போடுறத நிறுத்துங்க…காங். பிரமுகர் மீது கார்த்தி சிதம்பரம் ஆவேசம்

பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணி பின்னடவை சந்தித்து வருவதால், டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், முன்னாள் பாஜக எம்.பியுமான உதித்ராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ஓட்டுமெசின்கள் ஹேக் செய்யப்பட்டு விட்டது. செயற்கை கோள்களை தரையில் இருந்து கட்டுப்படுத்த முடியும்போது ஓட்டு மிசின்களை ஏன்ஹேக் செய்ய முடியாது? என்று கேள்வியை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தோற்றுப்போனா உடனே ஓட்டுமெசின் மீது பழியைப்போடுறத நிறுத்துங்க…காங். பிரமுகர் மீது கார்த்தி சிதம்பரம் ஆவேசம்

இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி., ’’தேர்தலில் தோற்றுப்போனால் ஓட்டுமெசின்கள் மீது பழியைப்போடுவதை முதலில் நிறுத்துங்க. தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமையாத போது ஓட்டுமெசின்களை குறை சொல்லுவது வழக்கமாகிவிட்டது.

ஓட்டுமெசின்கள் சரியில்லை, கோளாறு, ஹேக் செய்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டுகின்றார்களே தவிர ஒருவரும் அறிவியல் பூர்வமாக இதுவரை தங்களதுகுற்றச்சாட்டினை நிரூபிக்கவில்லை. என்னைப்பொறுத்தவரையிலும் மின்னணு வாக்கு எந்திரம் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அது வலுவான, துல்லியமான அதே நேரத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த சாதனம்’’ என்று தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.