Home அரசியல் முதல்வருக்காக காத்துக்கிடந்த பெண்கள், முதியவர்கள்!

முதல்வருக்காக காத்துக்கிடந்த பெண்கள், முதியவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா நோய்த்தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்து பல்வேறு திட்டப்பணிகளையும் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்று இறங்கியபோது அமைச்சர் தகடம்பூர் ராஜூ, முதல்வருக்கு மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்றார் முதல்வர். நெல்லை வழியாக சென்று கன்னியாகுமரி சென்றார்.

நெல்லை கேடிசி நகர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை சென்ற முதல்வருக்கு அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

முதல்வரின் வரவேற்புக்காக பெண்களும், முதியவர்களும் நெடுநேரம் சாலையில் காத்து நின்றனர்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews