விபூதி விவகாரம்: ஸ்டாலின் உருவபொம்மை எரிப்பு

 

விபூதி விவகாரம்: ஸ்டாலின் உருவபொம்மை எரிப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி அன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விபூதியை வாங்கி நெற்றியில் பூசாமல் கழுத்தில் லேசாக தடவிக்கொண்டு கீழே கொட்டிவிட்டது பெரும் சர்ச்சை ஆனது. நெற்றியில் பூசாமல் கழுத்தில் தடவியதால் அது என்ன டால்கம் பவுடா என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

விபூதி விவகாரம்: ஸ்டாலின் உருவபொம்மை எரிப்பு


இந்த விபூதி விவகாரத்திற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், ஸ்டாலின் அதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார்.

விபூதி விவகாரம்: ஸ்டாலின் உருவபொம்மை எரிப்பு

இதனால், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் முருகன் ஜி 113 இடங்களில் ஸ்டாலின் உருவபொம்மை எரிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். அதன்படி இன்று, உசிலம்பட்டியில் ஸ்டாலின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

இதையடுத்து, மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பாக் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் கதிரவன், இளைஞரணி தலைவர் ரவி தலைமையில் ஸ்டாலின் உருவபொம்மையை எரித்தனர்.
போலீசார் உடனே ஓடி வந்து எரிந்துகொண்டிருந்த உருவபொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் உருவபொம்மையை எரித்தவர்களை கைது செய்தனர்.

ஸ்டாலின் உருவபொம்மை எரிப்பினால் மதுரையில் பதற்றம் நிலவியது.