காலேஜ் பஸ்சில் ஏற மறுத்த பொன்னார்!

 

காலேஜ் பஸ்சில் ஏற மறுத்த பொன்னார்!

பாஜகவின் வேல்யாத்திரை மதக்கலவரங்களை ஏற்படுத்தும் என்கிற அச்சம் இருப்பதால் அந்த யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு நாளும் தடையை மீறி யாத்திரை நடத்த முயற்சித்து பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர் பாஜகவினர்.

தடையை மீறி ராணிப்பேட்டையில் வேல்யாத்திரை நடைபெறுவதாக பாஜக அறிவித்திருந்தது. இதையொட்டி ஏராளமான பாஜகவினர் நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடையில் குவிந்தனர். இதை தடுக்கும் பொருட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

காலேஜ் பஸ்சில் ஏற மறுத்த பொன்னார்!

இந்த யாத்திரையில் பங்கேற்க வரும் வழியிலேயே செங்கல்பட்டில் மாநில தலைவர் முருகன் கைது செய்யப்பட்டார். யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.

கூட்டத்தை அடுத்து வேல் யாத்திரை தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன என்பதை உணர்ந்த போலீசார் கூட்டம் முடியும் தருவாயில், திரண்டிருந்த 300க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்து கல்லூரி பேருந்தில் ஏற்றினர்.

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே போலீசார் கைது நடவடிக்கை ஈடுபட்டனர்.

இதனால், ‘’பேசுவதற்கும் கூட உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. வேல்யாத்திரைக்கு தடை விதித்திருக்கும் அரசு, பொதுக்கூட்டத்திற்கும் தடைவிதித்திருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்’’என்று ஆவேசமாக பேசினார்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணையும் கைது செய்து கல்லூரி பேருந்தில் ஏற்றினர். அப்போது ஆவேசமான பொன்னார், ‘’நான் கல்லூரி பேருந்தில் ஏறமாட்டேன். போலீஸ் வாகனத்தில்தான் ஏறுவேன்’’ என்று உரக்க குரல் எழுப்பினார்.

பொன்னாரின் ஆவேசத்தினால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.