டிரம்ப் பாணியிலேயே அவரது தோல்வியைச் சொல்லும் சுதந்திரதேவி சிலை கேலிச்சித்திரம்

 

டிரம்ப் பாணியிலேயே அவரது தோல்வியைச் சொல்லும் சுதந்திரதேவி சிலை கேலிச்சித்திரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதிபர் பதவியில் இருக்கும்போதே தேர்தலில் போட்டியிட்டு பதவியை இழந்தார் டொனால்ட் டிரம்ப். பதவியில் இருக்கும்போதே தேர்தலில் போட்டியிட்ட 11வது அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆனால் இவர் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.

டிரம்ப் பாணியிலேயே அவரது தோல்வியைச் சொல்லும் சுதந்திரதேவி சிலை கேலிச்சித்திரம்

தான் அதிபராக இருக்கும்போது ஆட்சியில் இல்லாத கட்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டும் டிரம்ப் குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், சுதந்திரதேவியின் கேலிச்சித்திரம் ஒன்று டிரம்பின் பாணியிலேயே அவரது தோல்வியை உணர்த்தும் கேலி சித்திரம் சமூக வலைத்தளக்களில் வைரலாகிறது.

தனது ஆட்சிக்காலத்தில் தன்னுடன் ஒத்துப்போகாத அதிகாரிகளின் பதவிகளை பறித்திருக்கிறார் டிரம்ப். அப்படிப்பட்டவர்களை குறிப்பிடும்போது ‘யூ ஆர் பயர்டு’( நீங்கள் பதவி நிக்கப்பட்டீர்கள் என்று சொல்லிவிட்டுத்தான் அவர்களின் பெயரைச்சொல்லுவது டிம்பின் வழக்கம்.

அதே மாதிரி நீயூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை, டிம்ப்பின் பாணியிலேயே அவரது தோல்வியை சொல்லுவிதமாக, டிரம்பை பார்த்து ‘யூ ஆர் பயர்டு’என்று சுதந்திர தேவி சிலை சொல்வது போன்ற கேலிச்சித்திரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.