திருப்பத்தூர்: ஆக்கிரமிக்கப்பட்ட மயானத்தை மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்

திருப்பத்தூர்: ஆக்கிரமிக்கப்பட்ட மயானத்தை மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்

வாணியம்பாடி அருகே அருந்ததியினர் சமூகத்துக்கு சொந்தமான மயானத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மயானம் அருகே கிராம மக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்: ஆக்கிரமிக்கப்பட்ட மயானத்தை மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை ஊராட்சி புருஷோத்தமன் குப்பத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் அருந்ததியர் காலனியை சேர்ந்த பொதுமக்களுக்கு 15 சென்ட் இடத்தை, மயானதிற்காக வருவாய்த் துறையினர் ஒதுக்கினர். இதனிடையே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு 6 சென்ட் நிலம் எடுக்கப்பட்டு, எஞ்சியிருந்த நிலத்தில் மயானத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.

திருப்பத்தூர்: ஆக்கிரமிக்கப்பட்ட மயானத்தை மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்

இந்நிலையில் மயானத்தை அதேபகுதியை சேர்ந்த தனிநபர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு, அங்கு உடல்களை புதைக்க அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த புருஷோத்தமன் குப்பம் கிராம மக்கள், மயானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் மற்றும் காவல்துறையினர் ஒரு வார காலத்திற்குள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மயானத்தை மீட்டு தருவதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்