மூன்று பெரும் விசயங்களில் சாதித்த முதல்வர்!

 

மூன்று பெரும் விசயங்களில் சாதித்த முதல்வர்!

புதிய தொழில் முதலீடுகளில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றிக்காட்டியது போல், நீர் மேலாண்மையிலும் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி முதலிடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். கொரோனா பரிசோதனையிலும் இந்திய மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழகத்தை கொண்டு வந்திருக்கிறார். இந்த மூன்று பெரும் விசயங்களில் சாதித்துக்காட்டிய முதல்வருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிகின்றன.

இரண்டாவது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா வரும் நவம்பர் 11,12 தேதிகளில் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் இந்த விழா காணொளி காட்சி மூலமாக நடைபெற இருக்கின்றது. மத்திய பாஜக அரசு அமைத்துள்ள ஜல் சக்தி அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

மூன்று பெரும் விசயங்களில் சாதித்த முதல்வர்!

இந்த ஆண்டுக்கான(2019 -2020) தேசிய நீர் விருதினை தமிழக அரசுக்கு அறிவித்துள்ளது ஜல்சக்தி அமைச்சகம்.

மக்களிடையே தண்ணீர் குறித்த விழுப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக மத்திய நீர்வள அமைச்சகம்(ஜல் சக்தி அமைச்சகம்) தொடங்கப்பட்டது. தண்ணீர் சிக்கனம், தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாநிலம், மாவட்டம், கிராம ஊராட்சி, நகர்ப்புற ஊராட்சி என்று மொத்தம் 16 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஆறுகளை மீட்டெடுத்தல் பிரிவில் இந்திய அளவில் இரண்டு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இரண்டு மாவட்டங்களுமே தமிழகத்தில் தான் உள்ளன. முதலிடம் வேலூர். இரண்டாமிடம் கரூர்.

அதே போல், நீர் சேமிப்பு பிரிவில் பெரம்பலூர் 2வது இடத்திற்கும், நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை தேர்வாகி இருக்கிறது.

புதிய தொழில் முதலீடுகளில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றிக்காட்டியது போல், நீர் மேலாண்மையிலும் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அதிக கவனம் செலுத்தி வந்து தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

நீர் மேலாண்மைக்காக முதல்வர் கடந்தாண்டு இஸ்ரேல் பயணம் மேற்கொள்வதாக இருந்தார். ஆனாலும், இஸ்ரேல் எல்லாம் போகாமலேயே நீர் மேலாண்மையில் அசத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.