Home ஆன்மிகம் எந்த எண்ணெய்யை கொண்டு எந்த தெய்வத்தை வணங்கலாம்!

எந்த எண்ணெய்யை கொண்டு எந்த தெய்வத்தை வணங்கலாம்!

யாருக்கு பயப்படுகிறமோ இல்லையோ கண்ணுக்கு தெரியாத நம்பிக்கையின் வடிவமான கடவுளுக்கு நம் மனசாட்சி பயந்தே இருக்கும். நம் நம்பிக்கையை மேலும் மெருகூட்டி, நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் மறைந்து, நல்ல எண்ணத்தை தரக்கூடியது தெய்வ வழிபாடு.

கடவுளை வணங்கும்போது, தீபம் ஏற்றி வணங்குவது நம் மரபு. அப்படி வணங்கும்போது, அமைதியையும், மகிழ்ச்சியையும் தரவல்லது. எந்த எண்ணெய்யை கொண்டு, எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

முழுதற்கடவுளான விநாயகப்பெருமானுக்கு தேங்காய் எண்ணெய்யும், செல்வத்தை அள்ளி தரும் திருமகளுக்கும், அழகே உருவான ஆறுமுகப் பெருமானுக்கும் பசு நெய்யால் தீபம் ஏற்றுவது சிறப்பு.

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளைத் தந்தருளும். மேலும், மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு மிக முக்கியம்.

குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவர்கள். எனவே, நம்மை காத்தருளும் தெய்வங்களான குலதெய்வத்துக்கு வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், பசுநெய் கலந்த முக்கூட்டு எண்ணெய்யால் தீபத்தை ஏற்றி வழிப்பட்டால், அவர்களின் அருளாசி முழுமையாக கிடைக்கும்.

சிவப்பெருமானின் ருத்திர அம்சமான பைரவருக்கு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வழிபட்டால் தீமைகளை அழியும். உலகத்தை படைத்த அன்னை ஆதி சக்தியின் வடிவங்களுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த பஞ்ச கூட்டு எண்ணெய்யை ஏற்றி வழிப்பட்டால் நம் மீது அன்பையும் கருணையையும் பொழிவாள் அன்னை ஆதி பராசக்தி.

மகாதேவனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் நல்லெண்ணெய்யும், ருத்ர வடிவ தெய்வங்களுக்கு இலுப்பை எண்ணெய்யை கொண்டு தீபத்தை ஏற்றி வழிபடவும். மற்ற எல்லா தெய்வங்களையும் ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும்.

கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளை தெய்வ வழிப்பாட்டுக்கு ஒருபோதும் உபயோகிக்கக்கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், கடன்களையும், பாவங்களையும் பெருக்கக்கூடியது தவிர்ப்பதே நல்லது.

வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

இளைஞரிடம் கத்திமுனையில் நகை, பணம் வழிப்பறி- பெங்களூரை சேர்ந்த 4 பேர் கைது

திருநெல்வேலி நெல்லை அருகே இளைஞரிடம் கத்திமுனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற பெங்களூரை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

‘சும்மா ஆக்டிங்’ தடுப்பூசி போட்டுக் கொள்வது போல நடித்த அதிகாரிகள்: அதிர்ச்சியூட்டும் வீடியோ!

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி...

பப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை!

பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.

டாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதும், உரிய ரசீது வழங்காததும் வாடிக்கையாகி விட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு...
Do NOT follow this link or you will be banned from the site!