Home அரசியல் மநுவுக்கும் மைலாப்பூருக்கும் என்ன தொடர்பு?

மநுவுக்கும் மைலாப்பூருக்கும் என்ன தொடர்பு?

மநுஸ்மிருதி விவகாரம் குறித்து கமல்ஹாசனிடம் எழுப்பிய கேள்விக்கு, அந்த நூல் இப்போது புழக்கத்தில் இல்லை. அதனால் அந்த நூல் பற்றி விமர்சனம் செய்வது தேவையற்றது என்று தெரிவித்திருந்தார். கமலின் இந்த பதில் விமர்சனத்திற்குள்ளானது. மநுஸ்மிருதி குறித்து தனது மருநாயகம் படத்தில் ஒரு பாடலையும் பதிவு செய்திருந்ததையும், பொன்பரப்பு சம்பவத்தின் போது அந்த பாடலை பதிவிட்டிருந்தையும் இணையங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், “மநு ஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம். அது பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லியிருக்கிற கமலஹாசன், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மைலாப்பூரில் போட்டியிடும் வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். மநுவுக்கும் மைலாப்பூருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கக் கூடாது என்று முகநூலில் பதிவிட்டிருக்கும் கவிஞர் பழனிபாரதி,

“மதம் கொண்டு வந்தது சாதி- இன்றும்
மனிதனைத் துரத்துது மநு சொன்ன நீதி”
என்று மருதநாயகம் படத்தில் கமலஹாசன் எழுதிய பாடல் வரிகளை இன்று முகநூலில் பதிவிட்டிருக்கிறார்கள்.

அது இருக்கட்டும்… மநுஸ்மிருதி புழக்கத்தில் இல்லை என்கிற கமலஹாசனுக்கு வழக்கறிஞர் அருள்மொழியின் ஒரு காணொலி மூலம் நான் அறிந்த சில தகவல்களை முன்வைக்க விரும்புகிறேன்.

கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 36 முறை இந்திய நீதிமன்றங்கள், தங்கள் தீர்ப்புகளில் மநு ஸ்மிருதியைப் பயன்படுத்தி இருக்கின்றன கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 26 முறை – குறிப்பாக உச்ச நீதிமன்றம் 7 முக்கியமான தீர்ப்புகளை மநு நீதியின் அடிப்படையில் வழங்கியிருக்கிறது.’’ என்று பதிவில் தெரிவித்திருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

4 தமிழக மீனவர்களின் உடல்கள்: இலங்கையில் பிரேத பரிசோதனை!

கச்சத்தீவு பகுதியில் உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கச்சத்தீவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், விசைப்படகில் தமிழக...

ஜெயலலிதாவின் நினைவு இல்லம் திறப்பு : முக்கியத் தகவல் இதோ!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும் 28ம் தேதி திறக்கப்படுவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவையடுத்து சென்னை போயஸ் கார்டனில் இருக்கும்...

’சிறை கைதியின் ஆரோக்கியத்திற்கு அந்த மாநில அரசே பொறுப்பு’ – திருமுருகன் காந்தி

சிறையில் ஒரு கைதி இருக்கும்போது அவருக்கான உடல்நிலை ஆரோக்கியம் சீர்கேட்டால் யார் பொறுப்பு என்கின்ற மிக முக்கியமான கேள்வியை மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி எழுப்பி இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் 35 வேட்பாளர்கள் – பட்டியலை வெளியிட்ட சீமான்

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் மற்ற கட்சியினர் இருக்க, 234 தொகுதிகளுக்கும் நாங்கள் வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம் என்று சொல்லி இருந்தார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Do NOT follow this link or you will be banned from the site!