பா.ஜ.கவின் அடுத்த குறி ராம மோகன் ராவ்.

 

பா.ஜ.கவின் அடுத்த குறி ராம மோகன் ராவ்.

எது, எப்படியோ? தமிழகத் தேர்தல் விவகாரங்களில் பாஜக இப்போது பேசப்படும் பொருளாக மாறி வருவதை மறுப்பதற்கில்லை.முதல் கட்டமாக தமிழக பாஜகவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அண்ணாமலை இணைந்தார்.

பா.ஜ.கவின் அடுத்த குறி ராம மோகன் ராவ்.

அடுத்ததாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நடிகை குஷ்பூ பாஜகவில் சேர்ந்தார்.புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் எஸ்.ஏ சந்திரசேகருக்கு பின்னால் இருந்து இயக்குவதும் பாஜகதான் என்கிறார்கள். இந்த நிலையில் பாஜகவின் டெல்லி மேலிடம் இன்னுமொரு முக்கிய புள்ளிக்கு குறி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் வேறு யாருமல்ல..தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ்தான். இவர் தற்போது ‘ஆர்.எம்.ஆர்’ பாசறை என ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்.

பா.ஜ.கவின் அடுத்த குறி ராம மோகன் ராவ்.

ராம மோகன் ராவ் என்கிற அவரது பெயர் சுருக்கம்தான் இந்த ஆர்.எம்.ஆர் பாசறை இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்.தமிழகத்தில் ஜாதி ரீதியிலான அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய கட்சியைத் தொடங்குமாறும், பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்யும்படியும் இவருக்கு டெல்லி பாஜக மேலிடம் ஆலோசனைகள் சொல்லி இதற்குத் தேவையான பணமும் அள்ளிக் கொடுத்திருக்கிறதாம்.


இந்தத் திட்டத்தின் அடிப்படையில் சமீபத்தில் கோவை. காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கிய ராம் மோகன் ராவ் அங்கு, சுமார் 16 ஜாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பேசியிருக்கிறார்.அந்த கூட்டத்துக்கு வந்த முக்கிய நிர்வாகிகளுக்கு, கைநிறைய பணமும் கொடுத்திருக்கிறார். ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஒருவர்தான் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாராம்.இன்னும் 30 ஜாதி அமைப்புகளை ஒன்று சேர்த்து தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்குமாறு பாஜக மேலிடம் அவருக்கு உத்தரவிட்டிருக்கிறதாம்.

சுபாஷ் சந்திரபோஸ்