ராமநாதபுரம்: “ராமேஸ்வரம் கோயில் நகைகளில் முறைகேடு நடைபெறவில்லை” – இணை ஆணையர்

 

ராமநாதபுரம்: “ராமேஸ்வரம் கோயில் நகைகளில் முறைகேடு நடைபெறவில்லை” – இணை ஆணையர்

ராமேஸ்வரம் கோயில் நகைகள் எடை குறைந்த விவாகரத்தில், முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என கோயில் இணை ஆணையர் கல்யாணி விளக்கம் அளித்துள்ளார்.

ராமநாதபுரம்: “ராமேஸ்வரம் கோயில் நகைகளில் முறைகேடு நடைபெறவில்லை” – இணை ஆணையர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற மறு மதிப்பீட்டில் பயன்பாட்டில் இருந்த மொத்தம் 215 பொருட்களில் தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டதாகவும், இதில் மொத்தம் 32 பொன் பொருட்களில் சுமார் 68 கிராம் எடை குறைவு மற்றும் சிறு சிறு பழுது ஏற்பட்டதற்கான மதிப்பு ரூ.2.14 லட்சம் எனவும், மொத்தமுள்ள 344 வெள்ளி பொருட்களில், 42 பொருட்களில் 25 ஆயிரத்து 811 கிராம் தேய்மானத்தின் அடிப்படையில், எடை குறைவான தொகை ரூ.10.93 லட்சம் எனவும், வெள்ளி பொருட்களில் தங்க முலாம் பூசப்பட்ட பொருட்களில் 43 கிராம் 700 மில்லி கிராம் எடை குறைவிற்கான மதிப்பு சுமார் ரூ.1.35 லட்சம் ரூபாய் இழப்பு என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம்: “ராமேஸ்வரம் கோயில் நகைகளில் முறைகேடு நடைபெறவில்லை” – இணை ஆணையர்

தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் அனைத்தும் எண்ணிக்கையில் சரியாக உள்ளதாகவும், கடந்த மறு மதிப்பீட்டிற்கும் தற்போதைய மறு மதிப்பீட்டிற்கும் இடையே 40 ஆண்டுகள் இடைவெளி உள்ள நிலையில், இந்த 40 ஆண்டு காலத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போது பணியில் உள்ளவர்கள் என மொத்தம் 47 பேரிடம், எடை குறைவுக்கான இழப்பிணை ஏன் தங்களிடம் வசூல் செய்யக்கூடாது? என விளக்கம் கோரி அறிவிப்பு அனுப்ப பட்டதாகவும், இதில் முறைகேடுகள் எதுவும் நடைபெற்றதாக மேற்படி மதிப்பீட்டு அறிக்கையிலோ, கோயில் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பிலோ தெரிவிக்கப்பட வில்லை என்றும் கூறினார். மேலும், இதற்காக பொதுமக்கள், பக்தர்கள் கோவில் நகையில் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கேட்டுகொண்டார்.