“பணம்வைத்து விளையாடும், அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை” – முதலமைச்சர் உறுதி

 

“பணம்வைத்து விளையாடும், அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை” – முதலமைச்சர் உறுதி

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் உயிரிழந்து வரும் நிலையில், பணம் வைத்து நடத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுக்களையும் தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

“பணம்வைத்து விளையாடும், அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை” – முதலமைச்சர் உறுதி

நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தற்கொலை செய்து வருவதால், அரசு இதனை கவனத்தில் கொண்டு இந்த விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அனைத்து வகையான இணையவழி சூதாட்ட விளையாட்டுகளையும் பொதுமக்களின் நன்மை கருதி தடைசெய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதுடன், பணம் வைத்து நடத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துபவர்களையும், அதில் ஈடுபடுபவர்களையும் குற்றவாளிகளாக கருதி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்ததாகவும், இருப்பினும், ஊடகங்கள் வாயிலாக பாதிப்பு ஏற்படும் என சொல்வதையும் அரசு கவனத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் – ஆசிரியர் சங்கங்களை கூட்டி கருத்துக்களை கேட்டு, கருத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

“பணம்வைத்து விளையாடும், அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை” – முதலமைச்சர் உறுதி

மேலும், பாஜகவின் வேல் யாத்திரையை சட்ட ரீதியாக அனுமதிக்க முடியாது என்று கூறிய முதலமைச்சர், மத்திய, மாநில அரசுகளின் விதிப்படி சட்ட ரீதியாக யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவித்தார். ஸ்டாலின் குறித்த பெயர் இல்லாத போஸ்டர்களுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், அரசு சரியான முறையில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வருவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆராம்பிக்கலாம் என்று தெரிவித்த முதல்வர், நடிகர் விஜய் கட்சி தொடங்குவது அவருடைய உரிமை என்றும் தெரிவித்தார்.