”தானாகவே அழியும் மெசேஜ்கள்” -வாட்ஸ்அப் அறிமுகம்!

 

”தானாகவே அழியும் மெசேஜ்கள்” -வாட்ஸ்அப் அறிமுகம்!

மெசேஜ்கள் 7 நாட்களில் தானாகவே அழிந்துவிடக்கூடிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த வசதி டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளில் வந்துவிட்ட நிலையில், வாட்ஸ்அப்பில் இது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

”தானாகவே அழியும் மெசேஜ்கள்” -வாட்ஸ்அப் அறிமுகம்!

இந்நிலையில் இந்த வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாத த்தில் வரும் அப்டேட்களில் இது உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஆண்டிராய்ட் மட்டுமின்றி ஐஒஎஸ், லீனக்ஸ் தளங்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

”தானாகவே அழியும் மெசேஜ்கள்” -வாட்ஸ்அப் அறிமுகம்!

டெலிகிராம் போன்ற மற்ற சில செயலிகளில் எவ்வளவு நேரத்தில் அந்த மெசேஜ்கள் தானாகவே அழிந்துவிட வேண்டும் என்பதை அனுப்புபவர் தீர்மானிக்க முடியும். ஆனால் வாட்ஸ்அப்பில் 7 நாட்களில் தானாகவே அந்த மெசேஜ்கள் அழிந்துவிடும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், முக்கிய தகவலாக இருக்கும்பட்சத்தில், அதை ஒரு வார காலத்திற்குள் மீண்டும் எடுத்து பார்த்துக்கொள்ள முடியும் என கருதும் வாட்ஸ்அப், அதே சமயம், அனுப்பப்படும் மெசேஜ்கள் நிரந்தரமாக இருந்துவிடுமோ என்ற அச்சப்படவும் தேவையிருக்காது என்று தெரிவித்துள்ளது.

எஸ். முத்துக்குமார்