“விரிவாக்க பணிகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குக” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

“விரிவாக்க பணிகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குக” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

குமரி மாவட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்காக பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, விரிவாக்க பணிகளை மேற்கொள்ள
வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

“விரிவாக்க பணிகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குக” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இதுதொடர்பாக அக்கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரப்பகுதிகளில் சாலை விரிவாக்கத்திற்கு கடைகள் மற்றும் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவது என்ற பெயரில் சாதாரண மக்களையும், வணிகர்களையும் மாநகராட்சி நிர்வாகம் தனித்தனியாக பார்த்து கட்டப்பஞ்சாயத்து முறையில் மிரட்டியும், இருபது ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கியும்நடவடிக்கை எடுத்து வருவதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

எனவே, குடியிருப்புகளையும், வணிக நிறுவனங்களையும் விரிவாக்கத்திற்கு
எடுப்பதற்காக சட்டபூர்வமாக அனைவரையும் அழைத்துப்பேசி அவர்களது ஒப்புதலோடு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று அவர் கேட்டுகொண்டார்.