“கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றம்” – முதல்வர் தகவல்

 

“கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றம்” – முதல்வர் தகவல்

கோவை மாநகர மற்றும் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்,

“கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றம்” – முதல்வர் தகவல்

கோவை மாவட்டத்தை பொருத்தவரை 3 கிலோ மீட்டர் நீளத்தில் காந்திபுரம் 2 அடுக்கு மேம்பாலம் ரூ.214 கோடி மதிப்பில் போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், உக்கடம் மேம்பாலம் ரூ.120 கோடி மதிப்பில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கும், சுங்கம் சந்திப்பில் ரூ.250 கோடி மதிப்பில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கும், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.66 கோடியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கும் மேம்பால பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவித்தார்.

“கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றம்” – முதல்வர் தகவல்

அதேபோன்று, கவுண்டர்மில் சந்திப்பில் ரூ.42 கோடி மதிப்பிலும், கண்ணப்பன் நகர் ரயில்வே மேம்பாலம் ரூ.16 கோடி மதிப்புலும், கணபதி – ஆவாரம்பாளையம் ரயில் மேம்பால பணி ரூ.55 கோடி மதிப்பிலும், அவினாசி – சின்னியம்பாளையம் வரை ரூ.1,100 கோடியில் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். அத்துடன்

உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பால பணிகளை, கரும்புக்கடையில் இருந்து ஆத்துப்பாலம் வரை ரூ.265 கோடி மதிப்பில் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு, நீட்டிக்க பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.