மனுஸ்மிருதி நூல் விவகாரம் குறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்த நூல் இப்போது புழக்கத்தில் இல்லை. புழக்கத்தில் இல்லாத மனு ஸ்மிருதி நூலை பற்றிய விமர்சனம் தேவையற்றது என்றார். மேலும், அரசியலமைப்பு சட்டம் பற்றி விமர்சனம் செய்தால் போராட்டம் வெடிக்கும் என்றும்,

காலத்திற்கு ஏற்றவாறு நாம் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால், நமது தரத்தில் மாற்றம் இருக்கக் கூடாது என்றார்.
புழக்கத்தில் இல்லாத மனு ஸ்மிருதி நூலை பற்றிய விமர்சனம் தேவையற்றது என்று கமல் சொன்ன கருத்து குறித்து திருமாவளவன், ’’அவர் ஏதோ ஒரு நெருக்கடியில் அப்படி சொல்லி இருக்கிறார். மற்றபடி அவர் மனதார சொல்ல வில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
திருமாளவன் ஏன் அப்படி சொன்னார்? என்று கேள்வி எழுந்ததுமே, மனுஸ்மிருதி நூல் குறித்து விமர்சனம் தேவையற்றது என்று இப்போது சொன்ன கமல், போன வருசம் அந்த நூலினால் உண்டான கலவரம் குறித்து சொன்னதை நெட்டிசன்கள் இணையங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பொன்பரப்பி சம்பவத்தின் போது, 20.4.2019ல்
‘’ மதங்கொண்டு வந்தது சாதி-
இன்றும்
மனிதனைத் துரத்துது மனு
சொன்ன நீதி.
சித்தம் கலங்குது சாமி -இங்கு
ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி.’’
என்ற மருதநாயகம் படத்தின் பாடல் வரிகளைச் சொல்லி,

மருதநாயகம் படத்திற்காக என் முத்த அண்ணன் இளையராஜாவும் , நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களூக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ‘’பொன்பரப்பி’’ சம்பவங்களுக்கும் , அப்பாடல் பொருந்திப்போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்ததை இணையங்களை வைரலாக்கி வருகின்றனர்.

வின்னர் படத்தில் நடிகர் வடிவேலு, அது போன மாசம். நான் சொன்னது இந்த மாசம் என்று காமெடி செய்வது போல, கமல்ஹாசன் போன வருசம் சொன்னதையும், இந்த வருசம் இப்போது சொன்னதையும் வடிவேலு காமெடி பாணியில், ‘அது போன வருசம்; இது இந்த வருசம்’என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித் திருக்கிறார்கள்.
