திண்டுக்கல்: இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை

 

திண்டுக்கல்: இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பணத்தகராறில் இளைஞரை கழுத்தறுத்து கொலை செய்த கூலித் தொழிலாளி, இன்று தூக்கிட்டு தற்கொலை
செய்துகொண்டார். நத்தம் அருகேயுள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் ஸ்ரீகாந்த்(18). சென்னையில் உள்ள வணிக வளாகத்தில்
பணிபுரிந்து வந்த அவர், சில நாட்களுக்கு முன் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

திண்டுக்கல்: இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில் நேற்றிரவு ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில்
ஸ்ரீகாந்த் கழுத்துஅறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவலின் பேரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நத்தம் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு, ஸ்ரீகாந்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இன்று அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் என்கிற ராமச்சந்திரன் (33) மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீகாந்த்திற்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதுதொடர்பாக நேற்றிரவு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் கொலையாளியை போலீசார் தேடி வருவதை அறிந்து, பயத்தில் ராமச்சந்திரன் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.