விசைத்தறிக்கு தனி அமைச்சகம்; திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு

 

விசைத்தறிக்கு தனி அமைச்சகம்; திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு

விசைத்தறிக்கு என்று தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும் என திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம், விசைத்தறியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி, டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை குழுவினர், நேற்று ஈரோட்டில் பல்வேறு அமைப்புகளிடம்
மனுக்களை பெற்றனர்.

விசைத்தறிக்கு தனி அமைச்சகம்; திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு

அப்போது, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், விசைத்தறி கூடங்களில் மாதம் ஒரு முறை
மின் கணக்கீடு செய்யவும், விசைத்தறிக்கு என தனியாக அமைச்சகம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மத்திய அரசு கொண்டு வரும் புதிய மின்திட்டத்தில் விசைத்தறிக்கு விலக்கு அளிக்கவும், இலவச – வேட்டி சேலைக்கு கூலி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை நிறைவேற்றித் தர கோரிக்கை விடுக்கப்பட்டது.