கன்னியாகுமரி: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, கைகுழந்தையுடன் இளம்பெண் தர்ணா

 

கன்னியாகுமரி: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, கைகுழந்தையுடன் இளம்பெண் தர்ணா

கன்னியாகுமரியில் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, கைக்குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் சந்தியா (25). பொறியியல் பட்டதாரியான இவர், அவரது மாமா மகனாகிய ரஜீஸ் (27) என்பரை காதலித்து வந்துள்ளார். இதனால் சந்தியா கர்ப்பமடைந்த நிலையில், திருமணத்திற்கு ரஜீஸின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, கைகுழந்தையுடன் இளம்பெண் தர்ணா

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரஜீஸ், சந்தியாவை திருமணம் செய்துகொண்டு அவரது வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார். பின்னர் அவர் தலைமறைவான நிலையில், சந்தியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து சந்தியா தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஓரிரு மாதங்களில் அழைத்து செல்வதாக ரஜீஸ் உறுதி அளித்துள்ளார். ஆனால் அவர் திரும்ப வராததால் விரக்தியடைந்த, சந்தியா தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து, குழித்துறை காவல் நிலையத்திலும், பின்னர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் சந்தியா புகார் அளித்த நிலையில், அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்தியாவை விவகாரத்து செய்ய ரஜீஷ் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, கைகுழந்தையுடன் இளம்பெண் தர்ணா

இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா, இன்று கணவர் வீட்டு முன் அவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.