தஞ்சை: வீட்டில் புகுந்த விஷப்பாம்பை கடித்துகொன்று, உயிரிழந்த வளர்ப்பு நாய்

 

தஞ்சை: வீட்டில் புகுந்த விஷப்பாம்பை கடித்துகொன்று, உயிரிழந்த வளர்ப்பு நாய்

தஞ்சையில் வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பை தன்னுயிரையும் மதிக்காமல் கடித்துகொன்ற வளர்ப்பு நாய் ஒன்று, விஷம் தலைகேறியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

தஞ்சை: வீட்டில் புகுந்த விஷப்பாம்பை கடித்துகொன்று, உயிரிழந்த வளர்ப்பு நாய்

தஞ்சை இ.பி.காலனி சிந்து நகரை சேர்ந்தவர் மீன் வியாபாரி எழில்மாறன்(55). இவருக்கு மாலா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பெண்ணிற்கு திருமணமாகிய நிலையில், வீட்டில் தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தனிமையை போக்கும் விதமாக ரியோ, ஸ்வீட்டி ஆகிய இரு நாய்களை வீட்டில் செல்லமாக வளர்த்து வந்தனர். இதனால் அந்த இரு நாய்களும் நண்பர்களைப் போல இவர்களிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை எழில்மாறனின் வீட்டுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதை கவனித்த ரியோ, தனது எஜமானரின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த பாம்பை வழிமறித்து அதனுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளது.

தஞ்சை: வீட்டில் புகுந்த விஷப்பாம்பை கடித்துகொன்று, உயிரிழந்த வளர்ப்பு நாய்

இதில் ரியோவை கட்டுவிரியன் பாம்பு கடும் விஷத்துடன் கொத்தியுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் ரியோ தொடர்ந்து சண்டையிட்டு, அந்த பாம்பை இரு துண்டுகளாக கடித்துப்போட்டது. இந்நிலையில் காலையில் தூங்கி எழுந்த மாலாவும், எழில்மாறனும் வீட்டின் ஒரு ஓரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் ரியோ படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தஞ்சை: வீட்டில் புகுந்த விஷப்பாம்பை கடித்துகொன்று, உயிரிழந்த வளர்ப்பு நாய்

அருகில் கட்டுவிரியன் பாம்பு இறந்துகிடந்தை பார்த்து நடந்தவற்றை யூகித்த அவர்கள், ரியோவை காப்பாற்ற முயற்சித்த நிலையில், அதற்குள் பரிதாபமாக இறந்துவிட்டது. நெருங்கிய உறவினரை இழந்ததை போல் உணர்ந்த எழில்மாறன் தம்பதியினர், தங்கள் வீட்டு பகுதியிலேயே ரியோவின் உடலை கண்ணீருடனும், மரியாதையுடனும் அடக்கம் செய்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் மாலா வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, ரியோவின் திடீர் மறைவை தாங்க முடியாத அதன் தோழி ஸ்வீட்டி உணவு அருந்தாமல் வீட்டில் சோகத்தோடு இருந்து வருவது பார்ப்போரை கண்கலங்க செய்கிறது.