கிருஷ்ணகிரி: யானைக்குட்டி சுட்டுக் கொலை – ஒருவர் கைது, நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

கிருஷ்ணகிரி: யானைக்குட்டி சுட்டுக் கொலை – ஒருவர் கைது, நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

ஓசூர் அருகே பெண் யானைகுட்டி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை கைதுசெய்த வனத்துறையினர், அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். ஓசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதிக்குட்பட்ட சென்னமளாம் கிராமத்தின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் அகழியில் இறந்த நிலையில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் குட்டியானை மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி: யானைக்குட்டி சுட்டுக் கொலை – ஒருவர் கைது, நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

பிரேத பரிசோதனையின் போது, யானை குட்டியின் தலைப்பகுதியில் இருந்து 3 இரும்பு குண்டுகள் மீட்கப்பட்டதை அடுத்து, அந்த யானை குட்டி நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து யானையை சுட்டுக்கொன்றவர்களை தேடி வந்தனர்.

கிருஷ்ணகிரி: யானைக்குட்டி சுட்டுக் கொலை – ஒருவர் கைது, நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

இந்நிலையில் சென்னமளாம் கிராமத்தை சேர்ந்த முத்தைய்யன்(40) என்பவரை கைதுசெய்த தனிப்படை குழு, அவரிடமிருந்த 7 அடி நீள நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் முத்தையனிடம் எதற்காக யானை சுடப்பட்டது?, இதில் மேலும் யாரேனும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்