ஃபேஸ்புக்கில் மக்கள் பயன்பாட்டிற்கு டார்க் மோட் – சோதனை தொடக்கம்

 

ஃபேஸ்புக்கில் மக்கள் பயன்பாட்டிற்கு டார்க் மோட் – சோதனை தொடக்கம்

விரைவில் ஃபேஸ்புக் செயலியை டார்க் மோடில் பயன்படுத்தலாம். இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம், ஆண்டிராய்ட் மற்றும் ஐஒஎஸ் தளங்களில் சில வாடிக்கையாளர்களுக்கு சோதனை அடிப்படையில் டார்க் மோட் வசதியை தர தொடங்கி உள்ளது.

ஃபேஸ்புக்கில் மக்கள் பயன்பாட்டிற்கு டார்க் மோட் – சோதனை தொடக்கம்

ஸ்மார்ட்போன் உலகில் டார்க் மோட் என்பது முக்கிய வசதியாக பார்க்கப்படுகிறது. டார்க் மோட் பயன்படுத்துவதால் பேட்டரி எரிதிறன் மிச்சப்படுவதுடன், கண்களுக்கும் எரிச்சல் குறைவு என கருதப்படுவதால், இந்த வசதி உள்ள போன்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்துவதை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதை புரிந்துகொண்ட கூகுள் நிறுவனம் ஆண்டிராய்ட் 10 இயங்குதளத்தை டார்க் மோட் வசதி கொண்டதாக அறிமுகப்படுத்தியது.

ஃபேஸ்புக்கில் மக்கள் பயன்பாட்டிற்கு டார்க் மோட் – சோதனை தொடக்கம்

இந்த வரிசையில் பல்வேறு நிறுவனங்களும், தங்கள் போன்கள் மற்றும் செயலிகளில் டார்க் மோட் வசதியை ஏற்படுத்த முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வரிசையில் ஃபேஸ்புக் நிறுவனம், ஏற்கனவே டார்க் மோட் சோதனையை தொடங்கி விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்த நிலையில், தற்போது ஆண்டிராய்ட் மற்றும் ஐஒஎஸ் தளங்களில் உள்ள சில வாடிக்கையாளர்களுக்கு சோதனை அடிப்படையில் டார்க் மோட் வசதியை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக்கில் மக்கள் பயன்பாட்டிற்கு டார்க் மோட் – சோதனை தொடக்கம்

இதன்படி ஃபேஸ்புக் செயலியில், செட்டிங்ஸ் மெனு சென்று, அங்கே செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷனை கிளிக் செய்தால் டார்க் மோட் வசதி கிடைக்கும் என்று தெரிகிறது. அதை கிளிக் செய்து டார்க் மோட் வசதியை முகநூல் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் அதே சமயம் இந்த வசதி தற்போது சோதனை நிலையில் தான் வழங்கப்பட்டுள்ளது என்பதால் அனைத்து வாடிக்கையாளர்களின் செயலியிலும் இது கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப், இண்ஸ்டாகிராம் மற்றும் மெசேஞ்சர் ஆகியவற்றில் ஏற்கனவே டார்க் மோட் வசதி வந்துவிட்ட நிலையில், ஃபேஸ்புக்கில் மட்டும் இந்தளவு தாமதப்படுவது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. எப்படியும் இந்த ஆண்டுக்குள் அதிகாரப்பூர்வமாக ஃபேஸ்புக்கில் டார்க் மோட் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ். முத்துக்குமார்