புதிய முதலீடுகளில் தமிழகம் முதலிடம்: மகாராஷ்டிராவை வீழ்த்தியது

 

புதிய முதலீடுகளில் தமிழகம் முதலிடம்: மகாராஷ்டிராவை வீழ்த்தியது

இந்தியாவிலேயே புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று கேர் ரேட்டிங் நிறுவனம் மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

புதிய முதலீடுகளில் தமிழகம் முதலிடம்: மகாராஷ்டிராவை வீழ்த்தியது

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் புதிய தொழில் திட்டங்களுக்கான அகில இந்திய முதலீடுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஆனாலும் புதிய முதலீடுகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு மகாராஸ்டிராவை வீழ்த்தி முதலிடத்திற்கு முந்தியிருக்கிறது. கடந்த 1.11.2020 தேதி வரை கேர் ரேட்டிங் நிறுவனம் மதிப்பீடு செய்து இவ்வாறு அறிவித்திருக்கிறது.

ஆந்திரா 11 சதவீதத்தையும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா தலா ஏழு சதவீதத்தையும் பெற்றுள்ளன. ஆனால், தமிழகம் அதிகபட்சமாக 16 சதவீத பங்கைக் கொண்டு முதலிடத்தில் இருக்கிறது.

முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் கொரோனாவுக்கு பிந்தைய முதலீடுகளில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த மாத இறுதியில், ரூ.10,062 கோடி மதிப்புள்ள ஒன்பது திட்டங்களுக்கும், 17,000-18,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையிலும் புதிய திட்டங்களுக்கு தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

புதிய முதலீடுகளில் தமிழகம் முதலிடம்: மகாராஷ்டிராவை வீழ்த்தியது

ஜூன் 15 ஆம் தேதி, மகாராஷ்டிரா அரசு ரூ .20,000 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கு 12 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தது. மே 27 அன்று தமிழகத்தில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் திடப்பட்டுள்ளன.

இந்த கொரோனா கால நெருக்கடியிலும் தமிழகம் புதிய முதலீடுகளில் சாதனை படைத்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திறம்பட ஆட்சி நடத்தி வருவதால்தான் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது என்று அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிகின்றன.