கன்னியாகுமரி: பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

கன்னியாகுமரி: பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பத்மநாபபுரம் அரண்மனை, 7 மாதங்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி: பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழமையான அரண்மனை உள்ளது. கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரண்மனை, ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதமாக பூட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கேரள அரசின் உத்தரவின் பேரில், இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக பத்மநாபபுரம் அரண்மனையை திறக்க, குமரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

கன்னியாகுமரி: பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

இதையடுத்து, இன்று காலை முதல் கடும் கட்டுபாடுகளுடன் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து ஊழியர்களும் முக கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோன்று, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, முக கவசம் மற்றும் கையுறை அணிந்து உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பத்நாபபுரம் அரண்மனையை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர். இதனால் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.