ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயில் நகைகளின் எடை குறைந்தது

 

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயில் நகைகளின் எடை குறைந்தது

ஆய்வில் கண்டுபிடிப்பு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் 65 வகையான நகைகளின் எடைகள் குறைந்துள்ளது, ஆய்வுகுழுவின் சோதனையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஊழியர்கள் 30 பேருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயில் நகைகளின் எடை குறைந்தது

புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 65 வகையான விலைமதிப்பு மிக்க ஆபரணங்கள் உள்ளன. கோவில் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த நகைகள், சிவராத்திரி, ஆடி திருக்கல்யாண விழா மற்றும் நவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அணிவிக்கப்படும்.

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயில் நகைகளின் எடை குறைந்தது

இந்நிலையில் ராமேசுவரம் கோவிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு அனைத்து வகை ஆபரணங்களையும் சரிபார்த்து, நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் மறுமதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில் சாமிக்கு அணிவிக்கப்படும் அனைத்து வகையான ஆபரணங்களும் ஆய்வுசெய்யப்பட்டன. அதேபோன்று திருவிழா காலங்களில் சுவாமி, அம்பாள் வலம்வரும் தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட வாகனங்கள், தேர்களின் எடையும் சரிபார்க்கப்பட்டன.

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயில் நகைகளின் எடை குறைந்தது

இந்த ஆய்வின்போது, கோவிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் பல நகைகளில், அதன் எடை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. நகைகளில் எடை குறைவு குறித்து கோவிலில் பணியாற்றும் குருக்கள், மணியம் மற்றும் ஓய்வுபெற்ற குருக்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கோவில் நிர்வாகத்தால் அபராத தொகையுடன் கூடிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. நோட்டீசில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரையிலும் அபராதம் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு கோவில் பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.