அரசியல்வாதிகளுக்கு பதவி தேடித் தரும் “நரசிம்மர்”

 

அரசியல்வாதிகளுக்கு பதவி தேடித் தரும் “நரசிம்மர்”

தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டு விட்டது. அரசியல்வாதிகள் எல்லோரும் “ரொம்ப பிசி”யாகி விட்டார்கள்.ஏற்கெனவே காலம், காலமாக இருந்த அரசியல்வாதிகள் தவிர இப்போது புதிதாகவும் பலர் களம் இறங்குவார்கள். இன்னும் சிலர் எம்.எல்.ஏ சீட் வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பார்கள். இப்படிப்பட்ட எல்லோருக்குமே கேட்ட வரம் தரும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் “நரசிம்மர்”.

அரசியல்வாதிகளுக்கு பதவி தேடித் தரும் “நரசிம்மர்”

இவருக்குறிய சில மந்திரங்களைச் சொல்லி சிறப்பு வழிபாடு செய்தால் அரசியலில் ஜொலிக்கலாம் என்கிறது சாஸ்திரத் தகவல்கள்.
நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். நரசிம்மர் என்பவர் துடி கொண்ட தெய்வமாகும் இவர் விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகக் கருதப்படுபவர். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது தொன்ம நம்பிக்கை

அரசியல்வாதிகளுக்கு பதவி தேடித் தரும் “நரசிம்மர்”

பக்தர்கள் எப்பேர்பட்ட சிக்கலான சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களை காப்பாற்றும் அவதார புருசாராக நரசிம்மர் விளங்குகிறார். நரசிம்மரை வழிபட்டால் சிவன் – பார்வதியை வழிபட்ட பலன் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது ஆந்திரா என்றாலும் நரசிம்மர் சாந்தமானது தமிழகத்தில்தான்.
இத்தகைய நரசிம்மரை வழிபடுவதற்கு ”நிராஞ்சன வழிபாடு” என்றொரு முறை இருக்கிறது.

அரசியல்வாதிகளுக்கு பதவி தேடித் தரும் “நரசிம்மர்”

இது வேறு ஒன்றுமல்ல..நரசிம்மர் முன்பாக பச்சரிசியை பரப்பி, தேங்காயில் நெய் ஊற்றி,தீபமேற்றி வணங்குவதுதான். இந்த சமயத்தில் ‘‘ஸ்ரீநரசிம்ஹாய நம’’ என்று சொல்லி ஒரு பூவைப் போட்டு வழிபட வேண்டும்.இதன் மூலம் ஒருவர் அரசியலில் ஜெயிக்கலாம் என்கிறது சாஸ்திரங்கள்.
தமிழகத்தில் ஏற்கெனவே ஏராளமான அரசியல்வாதிகள் இப்படி நரசிம்மரை வழிபட்டு வரும் விஷயம் வெளியில் தெரியாது.இப்போதைய அமைச்சரான ராஜேந்திர பாலாஜி நரசிம்மருக்குறிய நிராஞ்சன வழிபாடு செய்துதான் எம்.எல்.ஏ பதவி பெற்று அமைச்சரானார் என்ற தகவலும் உண்டு.,இது தவிர நமக்கு தெரிந்த வரையில் நயினார் நாகேந்திரன்,தளவாய் சுந்தரம் போன்ற பலர் நரசிம்மரின் பக்தர்களே.

சுபாஷ் சந்திரபோஸ்