பெண்களின் மூளை சிறுசு… ஆனா திறமை பெருசு – ஆய்வில் தகவல்

 

பெண்களின் மூளை சிறுசு… ஆனா திறமை பெருசு – ஆய்வில் தகவல்

பெண்கள் எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலோ, சொன்னாலோ அதில் ஒரு தீர்க்க தரிசனம் இருக்கும். இதை வைத்துதான் “பெண் புத்தி பின் புத்தி” என்ற பழமொழியே வந்தது. அதாவது பின்னால் வரக்கூடியதை முன்னதாகவே கணித்துச் சொல்லி விடுவார்கள்.

பெண்களின் மூளை சிறுசு… ஆனா திறமை பெருசு – ஆய்வில் தகவல்

இதை நிரூபிக்கும் வகையில் இப்போது ஒரு ஆய்வு முடிவு வந்துள்ளது. ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறியதாக இருந்தாலும் அதற்கு அதிக திறன் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது
அமெரிக்காவில் உல்ள கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ்,மற்றும் ஸ்பெயினில் உள்ள மேட்ரிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் மூளையை மையமாக வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினர்.. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு புலனறியும் தேர்வுகளை வைத்து சோதனைகள் மேற்கொண்டனர்.

பெண்களின் மூளை சிறுசு… ஆனா திறமை பெருசு – ஆய்வில் தகவல்

இதில் தூண்டுதல்,பகுத்தறிவு, எண் திறன், நிலைமையை வேகமாக மாற்றும் திறன் ஆகியவற்றில் ஆண்களை விடப் பெண்கள் சிறப்பாக இருப்பது தெரிய வந்தது.
பெண்களின் மூளை சிக்கலான விஷயங்களிலும் மிகக் குறைந்த செல்களின் சக்தியை மட்டுமே பயன் படுத்தி தீர்வு காணும் திறன் படைத்துள்ளது, எனினும், புலம் சார்ந்த நுண்ணறிவில் ஆண்கள் சிறப்பாக விளங்குவது தெரிய வந்தது.ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக இருந்தாலும் அவர்களின் மூளைக்கு அதிக திறன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சுபாஷ் சந்திரபோஸ்