கோவை: கேரள பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை சிறைபிடித்த மக்கள்

கோவை: கேரள பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை சிறைபிடித்த மக்கள்

கோவை அருகே கேரளா மாநில பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை, கிராமமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கேரள பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை சிறைபிடித்த மக்கள்

கேராளாவில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று, நேற்றிரவு போத்தனூர் சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டி ஊராட்சி குப்பை கிடங்கில், குப்பைகளை கொட்டியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்தகிராம மக்கள், சம்பவ இடத்திற்கு சென்று கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தி, லாரியை சிறை பிடித்தனர். லாரியில் இருந்த ஓட்டுநர் உட்பட பேர் தப்பியோட முயன்ற நிலையில், அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

கோவை: கேரள பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட முயன்ற லாரியை சிறைபிடித்த மக்கள்

அப்போது, அவர்கள் கேரளாவை சேர்ந்த அஸ்கர் அலி மற்றும் அப்துல் முஜீப் என்பது தெரியவந்தது. மேலும், கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் பேப்பர்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்து கோவையில் கொட்டிச்செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளர் மற்றும் மலுமிச்சம்பட்டி ஊராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பஞ்சாயத்து அதிகாரிகள் விசாரித்த பிறகு, சட்டவிரேதமாக பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த லாரி மற்றும் ஓட்டுநரை செட்டிபாளையம் போலீஸில் ஒப்படைக்க உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.