தூத்துக்குடி: முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகி வெட்டிகொலை

 

தூத்துக்குடி: முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகி வெட்டிகொலை

தூத்துக்குடி: முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகி வெட்டிகொலை

வாகனங்களுக்கு தீவைப்பு ஸ்ரீவைகுண்டம் அருகே முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகி வெட்டிக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீவைப்பில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமையா தாஸ்(55). இவர் பாஜகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு செயலளராக உள்ளார். மேலும், விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வயலில், யாதவர்தெருவை சேர்ந்த இசக்கி(21) என்பவரது ஆடு மேய்ந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி: முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகி வெட்டிகொலை

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை தென்திருப்பேரை பஜாரில் உள்ள டீகடையில் நின்றிருந்த ராமையா தாஸை, அங்கு வந்த இசக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த ராமையா தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த ராமையா தாஸ் உறவினர்கள், இசக்கியின் வீட்டை சூறையாடியதுடன், அங்கிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் வைக்கோல் படப்பிற்கு தீ வைத்து எரித்தனர்.

தூத்துக்குடி: முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகி வெட்டிகொலை

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேசன் மற்றும் ஆழ்வார் திருநகரி காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபினவு, தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பாஜக பிரமுகர் கொலையை தொடர்ந்து அங்கு இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொலையாளி இசக்கியை போலீசார் தேடி தீவிரமாக வருகின்றனர்.