திருப்பத்தூர்: சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு, மற்றொருவர் கவலைக்கிடம்

 

திருப்பத்தூர்: சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு, மற்றொருவர் கவலைக்கிடம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பத்தூரை சேர்ந்தவர் மதீன்(23). இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மதீன் தனது உறவினருடன் திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

திருப்பத்தூர்: சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு, மற்றொருவர் கவலைக்கிடம்

வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கசாவடி அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மதீன்(23) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவபமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.