Home இந்தியா மாவட்ட காங். தலைவரை துரத்தி துரத்தி செருப்பால் அடித்த பெண்கள்

மாவட்ட காங். தலைவரை துரத்தி துரத்தி செருப்பால் அடித்த பெண்கள்

ஒரு வாலிபரை இரண்டு பெண்கள் நடுரோட்டில் ஓட ஓட துரத்தி துரத்தி செருப்பால் அடிக்கும் வீடியோ இணையங்களில் மெல்ல வைரலாகி வந்தது. நடுரோட்டில் இழுத்துப்போட்டு அடித்ததில் அவர் சட்டை கிழிந்ததும், அவர் ஓட முயற்சிக்கையில், ஓட விடாமல் பேண்ட்-ஐ பிடித்து இறுக்கமாக பிடித்துக்கொண்டு அடிக்கிறார்கள் அப்பெண்கள்.

அந்த வீடியோவில் அடி வாங்கியவர் உத்தரபிரதேசம் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் அனுஜ் மிஸ்ரா என்று தெரியவந்ததும் பரபரப்பானது.

அந்த இரண்டு பெண்களில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவில் முக்கிய பொறுப்பாளர் என்றும், மூத்த தலைவர்கள் சொன்னதைக்கேடு அவரை கட்சியில் இருந்து நீக்கியதால்தான் கோபப்பட்டு அடித்துவிட்டார் என்று மிஸ்ரா விளக்கம் கொடுத்து வரும் நிலையில், வீடுகட்ட பணம் கொடுத்திருந்ததாகவும், அதை திருப்பி கேட்டபோது தவறாக நடந்துகொண்டதால் மேலிடத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசிலும் புகார் கொடுத்தோம் அவர்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி மிஸ்ராவை போட்டு அடித்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டோம் என்று கூறியிருக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக சொல்கிறார் ஓராய் வட்ட அலுவலர் சந்தோஷ்குமார்.


இந்த விவகாரம் உத்தரபிரதேச காங்கிரஸ் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், உ.பி. காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சித்தார்த்தப்ரி ஸ்ரீவாஸ்தா, அனுராக் மிஸ்ராவுக்கும் அப்பெண்களுக்கு இடையே இருக்கும் விவகாரம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“சசிகலா எழுந்து நடக்கிறார் ; உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்”

சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது என்று விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில்...

மணலியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை மணலி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ராமதாஸ் ஸ்லோ பாய்சன் கொடுத்து என் அண்ணன் கதையை முடித்துவிட்டார்…. காடுவெட்டி குரு சகோதரி பகீர் குற்றச்சாட்டு

வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த காடுவெட்டி குரு பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாக இருந்து வந்தார். அதனால்தான், ’’நான் பெற்றெடுக்காத மூத்த பிள்ளை காடுவெட்டி குரு’ என்று பெருமையாகச் சொல்லுவார்...

“ஆர். டி. ஓ. ஆபீஸ் பொண்ணுங்களை பத்தி ஆபாசமா சொல்லாதே ..” -ஊடகத்தால் உள்ளே போன நபர்.

ஆர் டி ஓ அலுவலகத்தில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத பெண்களை பற்றி ஆன்லைனில் தரக்குறைவாக கருத்துக்களை வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தார்கள்.
Do NOT follow this link or you will be banned from the site!