பதற்றத்தை ஏற்படுத்தும் வெற்றிவேல் யாத்திரை

 

பதற்றத்தை ஏற்படுத்தும் வெற்றிவேல் யாத்திரை

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதாக எழுந்த சர்ச்சைக்கு பிறகு முருகனை போற்றி தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை நடத்தப்போவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்தபோது பலத்த எதிர்ப்பு எழுந்தது. அறிவித்ததோடு அல்லாமல் அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்த நிலையில், வேல் யாத்திரையினால் மதக்கலவரம் ஏற்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் டிஜிபியிடம் புகார் தெரிவித்தார்.

பதற்றத்தை ஏற்படுத்தும் வெற்றிவேல் யாத்திரை

வேல்யாத்திரை மூலமாக தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பிளவுபடுத்துவதற்காக பாஜக கையில் எடுத்திருக்கும் ஆயுதம் இது. அதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது’’ என்று வலியுறுத்தினார்.

திருமாளவனைப் போன்றே பல்வேறு தரப்பினரும் இந்த வேல் யாத்திரையினால் தேவையற்ற கலவரம் எழும் என்று எச்சரித்த பின்னரும் வேல்யாத்திரையை நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டி நிற்கிறது பாஜக.

பதற்றத்தை ஏற்படுத்தும் வெற்றிவேல் யாத்திரை

வரும் நவம்பர் 6ம் தேதி அன்று திருத்தணி முருகன் கோவிலில் இந்த யாத்திரை தொடங்குகிறது. திருத்தணியில் தொடங்கும் இந்த யாத்திரையை திருச்செந்தூரில் நிறைவு செய்கின்றனர்.

இந்த யாத்திரையை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்று வெற்றிவேல் யாத்திரைக்கான மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கமலாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் எல்.முருகன், வெற்றிவேல் யாத்திரை தற்போதையை சூழலுக்கு தமிழக பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நிர்வாகிகளிடையே எடுத்துச்சொல்லி இருக்கிறார்.

எதிர்ப்புகளுக்கிடையே தொடங்கவிருக்கும் வேல்யாத்திரையினால் தமிழகத்தில் இப்போதே ஒரு பதற்றம் நிலவுகிறது.