மகாராஷ்டிராவில் கனமழையால் இதுவரை 164 பேர் உயிரிழப்பு!!

 

மகாராஷ்டிராவில் கனமழையால் இதுவரை 164 பேர் உயிரிழப்பு!!

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்ட்ராவில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கனமழையால் இதுவரை 164 பேர் உயிரிழப்பு!!

இந்நிலையில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விபத்தில் சிக்கி இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 100 பேருக்கு மேல் காணாமல் போயுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதுமகாராஷ்டிராவில் பெருமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழு அங்கு இறங்கி தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இதுவரை இவர்கள் இரண்டு லட்சத்து 29 ஆயிரம் பேரை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட நபர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மகாராஷ்டிராவில் கனமழையால் இதுவரை 164 பேர் உயிரிழப்பு!!

ராய்காட் மாவட்டம், மகாத் பகுதியில் கனமழை காரணமாக தெலி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கிருந்த வீடுகள் மற்றும் அதில் குடியிருந்தவர்கள் மண்ணில் புதைந்தனர். இதனால் அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து மீட்புக்குழுவினர் அனுப்பட்டு மக்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். மழை, வெள்ளத்தால் சாலைகளும் சேதமடைந்து போக்குவரத்தும் முடங்கியுள்ளது.