Home அரசியல் ஸ்டாலினை இனி பசும்பொன்னில் நுழைய விடமாட்டோம்... ஆவேசமாகும் தேவர் சமுதாய அமைப்புகள்

ஸ்டாலினை இனி பசும்பொன்னில் நுழைய விடமாட்டோம்… ஆவேசமாகும் தேவர் சமுதாய அமைப்புகள்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 113ஆவது ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன் ஆலயத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆலயத்தில் கொடுத்த விபூதியை நெற்றியில் பூசாமல் கீழே கொட்டியது பெரும் சர்சை ஆகியிருக்கிறது.

ஸ்டாலினின் இந்த செயல் முத்துராமலிங்க தேவரின் பக்தர்களையும், இந்துக்களையும் அவமதித்துவிட்டதாக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

’’தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவமரியாதையாக நடந்ததை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்கிறார் தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் நிறுவனர் கே.சி.திருமாறன். மேலும், ’’முத்துராமலிங்க தேவர் ஆலயத்தில் வழங்கிய திருநீரை நெற்றியில் பூசாமல் ஆலயத்தில் உள்ளேயே தட்டிவிட்டுச் சென்றது தேவரின் பக்தர்கள், இந்துமதத்தினர் அனைவரின் மனதும் புண்படும்படியாக இருக்கிறது. இறை நம்பிக்கையற்ற கட்சியாக தன்னை காட்டிக்கொள்கின்ற திமுக இது போன்ற ஆன்மீக தளங்களுக்கு வராமல் இருப்பது மேல்’’என்கிறார்.

’’முத்துராமலிங்க தேவர், தேவர் சமூகத்திற்கு மட்டும் போராடியது போல் குறுகிய எண்ணத்தில் சிறுமைப்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்து வரும் ஸ்டாலின் குற்றப்பரம்பரை சட்டம் என்பதை குற்றப்பத்திரிகை என உளறிவருவதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கெல்லாம் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’’என்று எச்சரிக்கிறார்.

’’பசும்பொன்னில் தவறாக நடந்துகொண்ட ஸ்டாலினை கண்டித்து தேவ இன அமைப்புகளை ஒன்று திரட்டி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த விருக்கிறோம்’’ என்கிறார் தென்நாடு மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் எஸ். கணேசத்தேவர். அவர் மேலும், ‘’தேவர் திருமகனாரை இழிவுபடுத்திய எந்த அரசியல் கட்சியும் தமிழகத்தில் ஆட்சி செய்ததாக சரித்திரம் இல்லை. தேவர் இன மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிக்கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர்ந்திடும்’’என்கிறார்.

’’முத்துராமலிங்க தேவரின் விபூதியை பூசாமல் கிழே கொட்டி மெத்தனம் காட்சிய ஸ்டாலின் சார்ந்த திமுகவிற்கு தேவரின சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஓட்டும் கிடைக்காது என்று எச்சரிக்கிறோம்’’ என்கிறது தமிழ்நாடு மூவேந்தர் பண்பாட்டுக்கழகம். மேலும், ’’நடந்த செயலுக்கு ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க தவறினால் எங்கள் இன மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறூம் என்பதை தெரியப்படுத்துகிறோம்’’என்கிறது.

’’அனைத்து தேவர் சமுதாய மக்களும் ஸ்டாலின் செயல்பாட்டால் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். இத்தகையை கீழ்த்தரமான செயலை செய்த ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் அவரை பசும்பொன்னுக்குள் அனுமதிக்க மாட்டோம்’’என்று எச்சரிக்கிறது அப்பநாடு மறவர் சங்கம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. அதேசமயம் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

வரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா... உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ...

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

தமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர்...

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...
Do NOT follow this link or you will be banned from the site!