பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் வேல்முருகன்?

 

பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் வேல்முருகன்?

பிக்பாஸ் -4 சீசன் தொடங்கி இன்றோடு 27 நாள் ஆகிறது. இதில், 28ம் நாள் போட்டியில் இருந்து பாடகர் வேல்முருகன் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் கசிகிறது.

பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் வேல்முருகன்?

விருத்தாசலத்தில் 1980ல் பிறந்தவர் வேல்முருகன். பள்ளி, கல்லூரி காலங்களில் மேடைகளில் பாடிவந்த வேல்முருகன், சுப்ரமணியபுரம் படத்தின் ‘மதுர குலுங்க குலுங்க..’பாடல் மூலம் சினிமா பாடகர் ஆனார். அடுத்து 2009ல் நாடோடிகள் படத்தில் பாடிய ‘ஆடுங்கடா …’ பாடல் மூலம் பிரபலம் ஆனார். 2010ல் ஆடுகளம் படத்தில், ‘ஒத்த சொல்லால..’பாடலின் மூலம் பிசியான பாடகர் ஆனார். 2014ம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகர் விருதையும், 2019ல் தமிழக அரசின் கலைமாமமணி விருதையும் பெற்றார்.

பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் வேல்முருகன்?

இவர் பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் 28ம் நாள் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல். ஆஜித் அல்லது வேல்முருகன் இருவருமே பாடகர்கள். இந்த இருவரில் ஒருவர்தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், வேல்முருகன் வெளியேற்றப்பட்டதாக தகவல் வருகிறது.