Home க்ரைம் கார் டிரைவருக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு மாமனார், கணவர், கொழுந்தனை கொலை செய்த மேனகா

கார் டிரைவருக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு மாமனார், கணவர், கொழுந்தனை கொலை செய்த மேனகா

சென்னைக்கு அருகே இருக்கும் படப்பை நரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுப்பராயன், தன் மகன்கள் செந்தில்குமார், ராஜ்குமாருக்கு கடந்த 2016ம் ஆண்டில் சொத்துக்களை பிரித்துக்கொடுத்துள்ளார். இதில் தம்பிக்கு அதிக சொத்துக்களை பிரித்துக்கொடுத்துவிட்டதாக கணவர் செந்தில்குமாரை தூண்டிவிட்டிருக்கிறார் மேனகா. இதனால் ஆவேசமான செந்தில்குமார் தனது கார் டிரைவர் ராஜேஷ்கண்ணாவுடன் சேர்ந்து ராஜ்குமாரை கொலை செய்திருக்கிறார்.

இந்த கொலைவழக்கில் செந்தில்குமாரும், ராஜ்குமாரும் சிறைக்கு சென்றனர். டிரைவர் ராஜேஷுக்கு ஜாமீன் கிடைத்ததும் அவர் முதலில் வெளியே வந்துவிட்டார்.
இந்த சமயங்களில் டிரைவருடன் மேனகா நெருக்கமாக பழகி வரும் செய்தி செந்தில்குமாருக்கு தெரியவந்திருக்கிறது.

சொத்துவிவகாரம் என்பது ஒரு சாக்குதான். டிரைவைர் மேல் உள்ள பிரியத்தாலதான் நாடகமாடி இருக்கிறார் மனைவி என்பதை புரிந்துகொண்டிருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் மேனாவிடம் இதுசம்பந்தமாக பேசி வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார் செந்தில்குமார். ஒரு நாள் அவர் தீடிரென காணாமல் போய்விட்டார்.

இதற்கிடையில் மாமனார் இருக்கும்வரை சொத்து நமக்கு கிடைக்காது என்று தன் தந்தையிட சொல்ல, அதனால் மாமனார் சுப்பராயனை மேனகாவின் தந்தை அருணும் டிரைவர் ராஜேஷ் கண்ணாவும் சேர்ந்து கொன்று புதைத்துள்ளனர். 2018ல் நடந்த இந்த கொலை வழக்கில் ராஜேஷ் கண்ணா சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

தனது மகன்செந்தில்குமாரை காணவில்லை என்று தாயார் பத்மினி மணிமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், மணிமங்கலம் போலீசார் அலட்சியமாக இருந்த நிலையில், அயனாவரத்தில் பத்மினியை கடத்திச்சென்று சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்ற முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சிக்கியதால் அயனாவரம் போலீசாரால் மேனகா கைது செய்யப்பட்டிருக்கிறார்.


பத்மினி கடத்தல் வழக்கில் ராஜேஷ்கண்ணாவையும் கள்ளக்குறிச்சியில் வைத்து பிடித்துள்ளனர் போலீசார். இரண்டு கொலை வழக்குகள் சம்பந்தப்பட்ட ராஜேஷ்கண்ணா குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துவிட்டனர்.

மாயமான செந்தில்குமார் குறித்த விசாரித்த ஆய்வாளர் மீது பாலியல் புகார் கூறி அதிரவைத்தார் மேனகா. இதனால் செந்தில்குமார் வழக்கை அவரிடம் விசாரிக்கவில்லை.

இதையடுத்து பத்மினி தனது மகன் செந்தில்குமாரை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில்குமாரை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு மணிமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் தீவிர விசாரணையில் இறங்கியபோதுதான் டிரைவருக்கும் மேனகாவுக்கும் உள்ள தொடர்பு தெரியவந்துள்ளது.
வழக்கின் விசாரணையில் மேனகா மாயமாகிவிட்டதால், அவரது தந்தை அருணிடம் விசாரித்ததில், மகளின் பேச்சைக்கேட்டு மருமகன் செந்தில்குமாரை2018ல் செஞ்சி அருகே பசுமலை தாங்கல் கிராமத்திற்கு வரவழைத்து கொலை செய்து சொந்த விவசாய நிலத்தில் புதைத்து விட்டதாக அதிரவைத்துள்ளார்.

செந்தில்குமாரின் எலும்புகூடுகளை தோண்டு எடுத்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேனகாவின் தந்தை உட்பட மூன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பெரியபாளையம் அருகே இருக்கும் கொமக்கம்பேடுவில் பிறந்து மூன்று கொலைகளை செய்திருக்கும் மேனகாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது.. தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான இயற்கைக்கு மாறான இந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்காது என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

இரவு ஊரடங்கால் உற்சாகமான திருடர்கள்… குஜராத்தில் கடைகளை உடைத்து பல லட்சம் பொருட்கள் கொள்ளை

குஜராத்தில் அமலில் உள்ள இரவு ஊரடங்கை பயன்படுத்தி, கடைகளை உடைத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி,...

நம் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாக 47 சதவீத மக்கள் தகவல்… ஆய்வு முடிவு

நம் நாட்டில் கடந்த 12 மாதங்களில் ஊழல் அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் ஒன்றில் 47 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் ஆசிய பிராந்திய...
Do NOT follow this link or you will be banned from the site!